நீ என்னுள் இருக்கும் நினைவு அல்ல உயிர் என்று...!!!

Madhu Preethaஉன்னை
மறக்க சொல்கிறார்கள்
பாவம் அவர்களுக்கு
தெரியாது...

நீ
என்னுள் இருக்கும்
நினைவு அல்ல
உயிர் என்று...!!!

நினைத்து நினைத்து பார்த்தேன்

உள்ளத்தால் அழுதாலும்
உதடுகளால் சிரிகின்றேன்
உறவுகள் கூட என்னால்
கலங்க கூடாது என்பதற்காக....
நினைத்து நினைத்து பார்த்தேன்

என் இதயம்

என் இதய நாலறையில்
ஓர் அறை கூட மீதமில்லை!
எல்லாம் உன்னால்...

உன் இதயம்

முதல் முதலாய்
என் விழிகள் படிக்க‌
விரும்பிய‌
புத்தகம்
உன் இதயம்

Madhu Preetha

நாளை முதல்

நாளை முதல்! உன்னை மறந்துவிடுவதாக
சொன்னது உண்மைதான்!....
ஆனால், எல்லா ‘நாளை’க்கும் ஒரு ‘நாளை’
இருக்கிறது

பாவமென்று காதலித்தேன்

நீ அழகாய் இருந்து தொலைத்துவிட்டாய்
அதனால் பாவமென்று காதலித்தேன்
என்றோ ஒருநாள்
எவளோ ஒருவளுக்காய்
எழுதித் தொலைத்தேன்!

madhu preetha

நீயாக நான் ஆனேன்

madhu Preethaகண்ணிரீல் கருவானேன் ..
கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிர் ஆனேன்..
.. நீயாக நான் ஆனேன்
... நீயாக நான் ஆனேன்

என் தேவதை

தாயையும் விடவும் நல்லவளாய் தேவதை உனைப்பார்த்தேன்
எங்கோ சொல்லும் சாலையிலே உனக்குள் தங்கிவிட்டேன்
எனை யாரெனக்கேட்டால் ஒரு சொல் போதும் நீயென நான்
சொல்வேன்
என் முகவரி கேட்டால் ஒரு வரி போதும் உன் பெயர் நான்
சொல்வேன்
உனை கடவுள் வந்து கேட்டாலும் எதிர்பேன் தரமாட்டேன்
எதிர்ப்பேன் தரமாட்டேன்.


Madhu Preetha

அவளின் கண்

Madhu Preethaபேசவும்
சித்திரவதை செய்யவும்
புன்னகைக்கவும்
அவளின்
கண்களால்
மட்டுமே
முடிகிறது

எனக்கு பிடித்தவை

எனக்கு பிடித்தவை எல்லாம் வெகு தூரம் ...
அன்று நிலா ...
இன்று நீ ..

காதல் ஒரு இனிய விஷம்

உன்னைவிட்டு
விலக முயல்கிறேன்
அலைகளாய்
விடாமல்
உள்ளிழுத்து கொண்டிருக்கிறது
உன் நினைவுகள்...


காதல் ஒரு இனிய விஷம்

Madhu Preetha

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்துப் போகக் கூடாது

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்துப் போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்று
எண்ணம் தோன்றக் கூடாது !
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயம் எல்லாம்
மறைந்துப் போகும் மாயங்கள் !
உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும் !
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும் !
யாருக்கில்லைப் போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும் ...........

madhu Preetha

உன்னை பார்த்துக்கொண்டேயிருக்கும்


madhu Preethaஉன்னை பார்த்துக்கொண்டேயிருக்கும்

‪#‎அற்புத_நிமிடங்களில்‬,

அனைத்தும் மறந்து

ஊமையாகிவிடுகிறது என்

உலகம் ......!

Friendship

Madhu Preetha

கடவுளை போலே காதல்

Madhu Preethaஉன்னை போலே யாரும் என்னை
தாண்டி போனால் உன்னை நினைப்பேன்
உந்தன் ஆசை முகம் பார்த்து கிடக்கத்தான்
உயிரை சுமப்பேன் .....
நெருங்கவும் இல்லை விலகவும் இல்லை
நெஞ்சம் செய்யும் தொல்லை காதல் ......
தொடங்கவும் இல்லை முடிவுகளும் இல்லை
கடவுளை போலே காதல் ......

ஏன் பார்த்தேன்

பார்த்த போதெல்லாம் பிரிவு வரும் என்று நினைக்கவில்லை பிரிந்த போது தான் நினைக்கிறேன் ஏன் பார்த்தேன் என்று..

Madhu Preetha

முன்னால் காதலி

 
Madhu Preetha

அன்று அலுலகம் வந்ததிலிருந்து ஒரு மாதிரியாக இருந்தாள் நண்பரின் முன்னால் காதலி.
என்னம்மா ஒரு மாதிரியாக இருக்க.?
உடம்பு சரியில்லையா.? என்றார் நண்பர்.
ஆமாங்க.. வயிற்று வலி என்றாள்.
துடி துடித்து போனார் நண்பர்.
பர்மிஷன் கேட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பு என்றார் .
வேனாம் பெண்டிங் வொர்க் நிறைய இருக்கு முடிச்சிட்டு
போறேன் என்றாள்.
அதெல்லாம் நான் பார்த்துகறேன். நீ வயிற்று வலியால்
கஷ்டபடுவதை
பார்த்துகிட்டு என்னால் பார்த்துகிட்டு இருக்க முடியாது என கூறி விட்டு ஒரு
ஆட்டோவில்
அவளை ஏற்றி விட்டு அவரும்
ஏறினார்.
அவள் அவர் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.
உங்களை கட்டிக்க போகிறவள் கொடுத்து வைத்தவள் என்றாள்.
அவர் சிரித்தார்.
அவள் வீடு வந்தது
அவளை அவள் வீட்டில் இறக்கி விட்டு விட்டு
இது உணக்கு தலைபிரசவம் உடம்பை பத்திரமாக பார்த்துக்கோ..! என கூறி விட்டு
ஆட்டோவில் ஏறினார் . அவர் மனசு மட்டும் வேண்டி கொண்டது இறைவா.! என் ஏமாற்றத்தின் வலியை அவள் பிரசவத்தின் போது தந்து விடாதே.! என்று.

நீதி: நீ விரும்பியவர் உனக்கு வலி கொடுத்தால் திரும்பி நீ வலியை கொடுக்காதே.. அன்பையே கொடு.

உன்னை நினைத்துக்கொண்டிருக்கும் போது

Madhu Preetha
ஒரு
நேரத்தில்
ஒருவேளைதான் செய்ய முடியும்...

உன்னை
நினைத்துக்கொண்டிருக்கும் போது
என்னை
நினைக்க எப்படி முடியும்..!


உன்னை தவிர என்னுள் நானே இல்லை

Madhu Preetha
இதுவரையில் யார் முகத்தையும்
ரசித்ததும் இல்லை..!
எப்போதும் யார் நினைவிலும்
துவண்டு போனதும் இல்லை..!

இதுவரை யார் பேச்சிலும்
சலனம் கொண்டதும் இல்லை!
நான் நானாகத் தான் இருந்தேன்.
உன்னைக் காணும் வரை..!

என்று என்னுள் வந்தாயோ
அன்றில் இருந்து எத்தனை
மாற்றங்கள் என்னுள்..!

ஒரு பெண்ணிற்க்குள்
இத்தனை சக்தி உண்டா..!
இதுவரை போதும் பெண்ணே
இனி எதையும் மாற்றாதே..!

என்னையே மறந்து தான்
போகிறேன்..!
உன்னை தவிர என்னுள்
நானே இல்லை...!

Love

Madhu Preetha

நீ மட்டும் நிஜமானால் நான் என்றும் நிழலாவேன்

Madhu Preethaஎன்னை உன்னிடம் விட்டு செல்கிறேன்
எதுவும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது
எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
என் இரவையும் பகலையும் மாற்றிபோனாய்
ஏன் இந்த பிரிவை தந்தாய்
என் இதயத்தில் தனிமையை ஊற்றிபோனாய்
உள்ளே உன் குரல் கேட்குதடி
என்னை என்னுயிர் தாக்குதடி
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்
மறந்தேன் நான்
ღ நீ மட்டும் நிஜமானால் நான் என்றும் நிழலாவேன ღ

Understanding

Madhu Preetha

Nice Lines

Madhu Preetha

You are My Life

Madhu Preetha

True Love

Madhu Preetha