அளவுக்கு அதிகமாக பாசம் வைத்தால்

ஒருவர் மீது அளவுக்கு அதிகமாக
பாசம் வைத்தால் -அது
பின்னொரு காலத்தில்
வலி தரும் என்று உன்னை சந்தித்து- பின்
பிரிந்த போதுதான் அறிந்தேனடி ...!
இன்னொரு ஜென்மம் நீ ஆணாக பிறந்து
உன் போன்ற ஒரு பெண்ணிடம் இதயத்தை
இழந்து ..!
தனிமையில் நீ தவித்து உன் இதயம்
வலிக்கும் போதுதான் என் இதய வலி
புரியுமென்றால் ...!
இன்று என் இதயத்தின் வலி உனக்கு
புரியாமலே போகட்டும் ...!
பூ போன்ற உன் இதயம் -என்றும்
வலி காணாமலே வாழட்டும் ...!