ஏமாறுகிறேன் நான்

உன்னை நினைக்கும் போதெல்லாம்
நிசப்தம் ஆகிறேன் நான்
சப்தம் குறைந்து இரைச்சலற்று
போகிறது மன உரையாடல்கள்


கண்ணீர் ததும்புகிறது
நீ என் வாழ்வின் இறத்தல் அடையாளம்
என் உணர்வுகள் பகிரப்படாமல்
முடக்கப்பட்டதே
என் கனவுகளுக்கு இறக்கை
ஒடித்து இறகுகள் பிய்க்கப்பட்டதே
முக மூடிக்குள் ஒளிந்து
கண்ணாமூச்சு ஆடுகிறாய்
தொலைந்துவிட்டாய் என் வாழ்க்கையின்
மையச் சுற்றிலிந்து
ஆனாலும் மறக்கப்பட வில்லை
மறக்கப்பட்டதாக ஏமாறுகிறேன் நான்