அன்று அலுலகம் வந்ததிலிருந்து ஒரு மாதிரியாக இருந்தாள் நண்பரின் முன்னால் காதலி.
என்னம்மா ஒரு மாதிரியாக இருக்க.?
உடம்பு சரியில்லையா.? என்றார் நண்பர்.
ஆமாங்க.. வயிற்று வலி என்றாள்.
துடி துடித்து போனார் நண்பர்.
பர்மிஷன் கேட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பு என்றார் .
வேனாம் பெண்டிங் வொர்க் நிறைய இருக்கு முடிச்சிட்டு
போறேன் என்றாள்.
அதெல்லாம் நான் பார்த்துகறேன். நீ வயிற்று வலியால்
கஷ்டபடுவதை
பார்த்துகிட்டு என்னால் பார்த்துகிட்டு இருக்க முடியாது என கூறி விட்டு ஒரு
ஆட்டோவில்
அவளை ஏற்றி விட்டு அவரும்
ஏறினார்.
அவள் அவர் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.
உங்களை கட்டிக்க போகிறவள் கொடுத்து வைத்தவள் என்றாள்.
அவர் சிரித்தார்.
அவள் வீடு வந்தது
அவளை அவள் வீட்டில் இறக்கி விட்டு விட்டு
இது உணக்கு தலைபிரசவம் உடம்பை பத்திரமாக பார்த்துக்கோ..! என கூறி விட்டு
ஆட்டோவில் ஏறினார் . அவர் மனசு மட்டும் வேண்டி கொண்டது இறைவா.! என் ஏமாற்றத்தின் வலியை அவள் பிரசவத்தின் போது தந்து விடாதே.! என்று.
நீதி: நீ விரும்பியவர் உனக்கு வலி கொடுத்தால் திரும்பி நீ வலியை கொடுக்காதே.. அன்பையே கொடு.