உன்னை தவிர என்னுள் நானே இல்லை

Madhu Preetha
இதுவரையில் யார் முகத்தையும்
ரசித்ததும் இல்லை..!
எப்போதும் யார் நினைவிலும்
துவண்டு போனதும் இல்லை..!

இதுவரை யார் பேச்சிலும்
சலனம் கொண்டதும் இல்லை!
நான் நானாகத் தான் இருந்தேன்.
உன்னைக் காணும் வரை..!

என்று என்னுள் வந்தாயோ
அன்றில் இருந்து எத்தனை
மாற்றங்கள் என்னுள்..!

ஒரு பெண்ணிற்க்குள்
இத்தனை சக்தி உண்டா..!
இதுவரை போதும் பெண்ணே
இனி எதையும் மாற்றாதே..!

என்னையே மறந்து தான்
போகிறேன்..!
உன்னை தவிர என்னுள்
நானே இல்லை...!