உயிர் நண்பன்

விரசமில்லாமல் நாம்
விரல் கோர்த்து நடந்ததுண்டு.

உனக்காக நானும்,
எனக்காக நீயும்
எத்தனையோ முறை
இறைவனை தொழுததுண்டு.

சேர்ந்து சிரிப்பது மட்டுமல்ல
சேர்ந்து அழுவதும் நட்பு தான்
என எனக்குணர்த்திய

தோழியே!!!
நீ
ஆணாக மாறிவிடு,
சமுதாயத்தின் சந்தேகப்
பார்வையில் இருந்து
நாம் விடுபடலாம்.