நட்பு

உறவென்று சொல்லிக்க யாரும் இல்லாவிட்டாலும்
உயிர் என்று சொல்லிக்கொள்ள ஒரு நட்பு இருந்தால்
போதும் உன்னை போல்!

அன்பு

அன்பு என்பது  
கரும்பலகை அல்ல,
எழுதி எழுதி அழிப்பதற்கு...
அது,
கல்வெட்டு போன்றது
என்றும் நிலைத்திருக்கும்...
மண்ணோடு புதையும் வரை
நெஞ்சோடு வைத்திருப்பேன்
உன் நினைவுகளை...

உண்மையான "நட்பு"

காதல் என்பது நேசிப்பது
நட்பு என்பது சுவாசிப்பது

my dear friends..........................

அழகு இருந்தால் வருவேன் என்றது "காதல்".....

பணம் இருந்தால் வருவேன் என்றது "சொந்தம்".....

எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது................."நட்பு"


........இதுவே உண்மையான் "நட்பு"......

பூக்கள் என்பது
உதிரும் வரை
இரவு என்பது
விடியும் வரை
உறவு என்பது
பேசும் வரை
பிரிவு என்பது
இணையும் வரை
நட்பு என்பது



In case you're interested in knowing more info on air conditioner repair, stop by www.oc24hours.com

உயிர் நண்பன்

விரசமில்லாமல் நாம்
விரல் கோர்த்து நடந்ததுண்டு.

உனக்காக நானும்,
எனக்காக நீயும்
எத்தனையோ முறை
இறைவனை தொழுததுண்டு.

சேர்ந்து சிரிப்பது மட்டுமல்ல
சேர்ந்து அழுவதும் நட்பு தான்
என எனக்குணர்த்திய

தோழியே!!!
நீ
ஆணாக மாறிவிடு,
சமுதாயத்தின் சந்தேகப்
பார்வையில் இருந்து
நாம் விடுபடலாம்.

உன் கோவமும் அன்பும்

உன் கோவம்
உன்னை நேசிப்பவர்களை
யோசிக்க வைக்கும்...
ஆனால்,
உன் அன்பு,
உன்னை வெறுப்பவர்களையும்
நேசிக்க வைக்கும்...

இதயத்தில் என் நண்பன்/தோழி நீ

வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு'

"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"

Natpu Kavithai

Un Natpu ennum sirayil sikki konden, Thavarugal seithaal thandithu vidu Aanal viduthalai mattum seithu vidathe.