என் இதயம் செய்த கடைசி தவறு

காதலை கூட ஒரு
வார்த்தையாய்
நேசிக்காத அவளை
நான் வாழ்க்கையாய்
நேசித்தது என் இதயம்
செய்த கடைசி தவறு...

அளவுக்கு அதிகமாக பாசம் வைத்தால்

ஒருவர் மீது அளவுக்கு அதிகமாக
பாசம் வைத்தால் -அது
பின்னொரு காலத்தில்
வலி தரும் என்று உன்னை சந்தித்து- பின்
பிரிந்த போதுதான் அறிந்தேனடி ...!
இன்னொரு ஜென்மம் நீ ஆணாக பிறந்து
உன் போன்ற ஒரு பெண்ணிடம் இதயத்தை
இழந்து ..!
தனிமையில் நீ தவித்து உன் இதயம்
வலிக்கும் போதுதான் என் இதய வலி
புரியுமென்றால் ...!
இன்று என் இதயத்தின் வலி உனக்கு
புரியாமலே போகட்டும் ...!
பூ போன்ற உன் இதயம் -என்றும்
வலி காணாமலே வாழட்டும் ...!

கொன்று விடுகிறாய்

உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது
கத்திஇன்றி ,,, ரத்தம் இன்றி
பேசாமல் சிரிக்காமல்
மொவ்னமாக இருந்தே
என்னை கொன்று விடுகிறாய் ....

lies

Madhu Preetha

26836f82e46040fca5a806badc0036547afa3dbd

என் நினைவு வருவதில்லையா ???

ஒரு நிமிடம் கூட உனக்கு என் நினைவு வருவதில்லையா ???
ஒரு வினாடி கூட உன் நினைவின்றி நான்
இருந்ததில்லையே...!!! ;-(

என் இதயத்தில்

என் இதயத்தில்
உனக்கான இடம் அப்படியே தான் இருக்கும்...
அங்கு நீயும் வரப் போவதில்லை
நானும் அதை யாருக்கும் தரப்போவதும் இல்லை...

நீ முன்பே சொல்லியிருந்தால்

நான் ஒரு பெண்ணுடன் நட்புடன்
பழகி வந்தேன்.

அந்த
பெண்ணுக்கு திருமணம்
நிச்சயமானபின் மூக்குத்தி அணி
தொடங்கினாள்.

அதுவரை நான் பார்த்த
அவளுக்கும் மூக்குத்தியுடன்பார்த்த
அவளுக்கும் நிறைய வித்தியாசமாக
தெரிந்தது. அவ்வளவு அழகாக
தோன்றினாள்.

நீ முன்பே மூக்குத்தி அணிந்திருந்தால்
நானே உன்னை பெண்
கேட்டு வந்திருப்பேன்
என்று அவளிடம் கூறினேன்.

அதற்கு அவள் சொன்ன பதில்
வாழ்நாள் முழுவதும் மறக்க
முடியாததாக அமைந்துவிட்டது.

"நீ முன்பே சொல்லியிருந்தால் நான்
அணிந்திருப்பேனே"

Madhu Preetha

இளமையா இருக்க ஆசையா?

இளமையா இருக்க ஆசையா?

‘குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்’ என்கிறது சித்த மருத்துவம். குமரி என்பது சோற்றுக்கற்றாழை யின் மற்றொரு பெயர்.

‘அலோவேரா’ சோப்பு, ஷாம்பூ... எல்லாம் சோற்றுக் கற்றாழை மூலம்தான் உற்பத்தி செய்கிறார்கள். தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு.

கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். 
சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள ் மறைந்து போகும். இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும். கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

என்ன இல்லை சோற்றுக்கற்றாழை யில்!

சோற்றுக் கற்றாழைக்குசித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும ் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங் களை கொண்டது.

தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லகட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணிபற்றாமலிருப்பதற ்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.
கற்றாழையின் சோற்றைத்தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக்குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.
சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண்ஆறும்.

கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.

மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதா ல் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையு ம் அதிகரிக்கிறது

தவறாக எண்ணி விடாதே காதலி... சாம்பலாகி போவேன்

உனக்கு என்னுடன் பேசுவதற்கு
விருப்பமில்லாமல் இருக்கலாம்
ஆனால் எனக்கு
உன்னைதவிர யாருடனும்
பேசுவதற்கு விருப்பமில்லை...!

என்ன செய்வது நான் நீ மறந்துவிட்டாய்....
ஆனால் என்னால் உன்னைப் போல்
மறந்து விட‌ முடியவில்லையே!

நான் உன்னை மறக்க நினைத்து
இறந்து கொண்டிருக்கிறேன்...
என் இதயதுடிப்பை கூட நிறுத்திவிடுவேன்
அதில் உன் நினைவுகளைதான்
என்னால் நிறுத்த முடியவில்லை...!

கடந்தகாலம் உன்னோடு
நிகழ்காலம் உன் நினைவுகளோடு
என் எதிர்காலம் யாரோடு...???

தவறாக எண்ணி விடாதே காத
லி...
சாம்பலாகி போவேன்...!

Madhu preetha

என் இதயத்தை விட்டு

நிமிடத்தில்

என்னை விட்டு பிரிந்த நீ. . !

ஒரு நிமிடம்கூட பிரிந்ததில்லை

என் இதயத்தை விட்டு

Madhu Preetha